அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் ராஜினாமா… பிரதமர் தெரேசா மே வேதனை

July 11, 2019 31 0 0

கவலை அளிக்கிறது… அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் கிம் டரோச்-இன் பதவி விலகல் மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய விமர்சனங்களை உள்ளடக்கிய ட்ரொச்-இன் ரகசிய மின்னஞ்சல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். பிரித்தானிய தூதரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி தூதருக்கு பூரண ஆதரவைத் தெரிவித்த பிரதமர் மே-யையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் பதவியிலிருந்து விலகுவதற்கான நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரிய விடயமென தெரேசா மே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பிரித்தானிய தூதரின் பதவி விலகலுக்கு கவலை தெரிவித்துள்ளனர்.

Categories: world news
share TWEET SHARE