அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

July 11, 2019 34 0 0

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு… தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Categories: sri lanka
share TWEET SHARE