இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் 2500 பதுங்கு குழிகள் அமைப்பு

June 9, 2019 58 0 0

2500 பதுங்கு குழிகள்… ஜம்மு – காஷ்மீரில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த ஆண்டில் மட்டும், 2,500 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரில் உள்ள, இந்தியா – பாக்., எல்லை பகுதிகளில் அமைந்துள்ள கத்துவா, சம்பா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில், பாக்., படையினர், அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காகவும், ராணுவத்தினருக்காகவும், 10 ஆயிரம் பதுங்கு குழிகள் அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், முழு வேகத்தில் நடக்கின்றன. இந்த ஆண்டு மட்டும், 2,514 பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பணிகளை, பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் செய்து வருகின்றனர். பணியை சரியாக திட்டமிட்டு, குறித்த நேரத்தில் முடிக்க, இலக்கு நிர்ணயித்து பணியாற்ற அறிவுத்தப்பட்டுள்ளது. பணியில் தாமதம் காட்டும் பொறியாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Categories: india news
share TWEET SHARE