இரண்டு சிறுவர்களுடன் முதியவர் மாயம்… பொலிஸார் தீவிர விசாரணை

July 11, 2019 31 0 0

கனடாவில் இரண்டு சிறுவர்களுடன் முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 70 வயதான லியோ ஈஸ்டன் என்ற முதியவரே தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காணாமல் போனவர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போனவர்கள் இறுதியாக, BVBP364 என்ற இலக்க வாகனத்தில் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காணாமல் போயுள்ளவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்களை உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். அவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories: Canada
share TWEET SHARE