இலங்கையில் பல மில்லியன் மதிப்பு போதை மாத்திரைகள் சிக்கின

July 11, 2019 18 0 0

பல மில்லியன் மதிப்பு போதை மாத்திரைகள் சிக்கின… வெளிநாட்டவர் ஒருவரினால் கல்கிஸை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரின் முகவரிக்கு அனுப்பபட்ட பொதியினுள் இருந்து பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக நேற்று (புதன்கிழமை) வருகை தந்தவரை சுங்கத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியினுள் இருந்து சுமார் 14.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,952 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: sri lanka
share TWEET SHARE