ஈரான் எண்ணெய் கப்பல் தலைவர், தலைமை அதிகாரி கைது… பதற்றம்

July 12, 2019 3 0 0

எண்ணெய் கப்பல் தலைவர் கைது…பிரித்தானிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரான் எண்ணெய் கப்பலின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிப்ரால்டரில் பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் சிரியாவிற்கு மசகு எண்ணெய் எடுத்து சென்ற ஈரான் கப்பலை பிரித்தானிய அதிகாரிகள் சிறைபிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் மூத்த இராணுவ அதிகாரி, இந்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன்னேறிய பிரித்தானியாவின் எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 வகை போர் கப்பலை, மூன்று ஈரானிய ஆயுத கப்பல்கள் சுற்றி வளைத்ததாகவும், அதனை ரோயல் கடற்படை போர்க்கப்பல் விரட்டியதாகவும் செய்தி வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக அப்பகுதியில் இருந்த அமெரிக்க விமானம் சம்பவத்தினை காணொளியாக பதிவு செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலே, பிரித்தானிய ரோயல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Categories: world news
share TWEET SHARE