எண்ணெய் பசை அதிகம் உடைய சருமத்தினர் என்ன செய்யலாம்!

July 14, 2019 20 0 0

எண்ணெய் பசை அதிகம் உடைய சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப் பயன்படுத்துவது நல்லது. எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும். தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்ஸை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும்.

Categories: womens-tips
share TWEET SHARE