எளிமையான திகைக்க வைக்கும் சமையலறை குறிப்புகள் உங்களுக்காக!!!

July 11, 2019 51 0 0

சில சமயம் திகைக்க வைக்கும் சில விஷயங்களை எளிமையாக முடிக்கலாம். இதோ உங்களுக்காக சமையலறை டிப்ஸ்!!! பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும். இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி. அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக் கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும். பூண்டைப் பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் இதயக் கோளாறு கட்டுப்படும்.,வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது, அரை கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் கமகமக்கும். தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றி, கேசரி பவுடர் போடாமல் செய்து பாருங்கள். வெண்மையாக பால் கோவாவுடன் போட்டி போடும் சுவை..! பாதுஷா செய்யப் போகிறீர்களா? சோடா, டால்டா இரண்டுடனும் கொஞ்சம் கெட்டியான புளிப்புத் தயிரும் சேர்த்துப் பிசைந்தால், பதர் பதராக மிருதுவாக, சர்க்கரைப் பாகில் ஊறி புதுச்சுவையோடு இருக்கும்.

Categories: womens-tips
share TWEET SHARE