ஒரே நாளில் வருகின்றனர்… கேரளாவுக்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும்!

June 6, 2019 83 0 0

ஒரே நாள்… ஒரே நாளில் கேரளா வருகின்றனர்… பிரதமர் மோடியும், காங்., தலைவர் ராகுலும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை(7ம் தேதி) கேரளா வருகின்றனர் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும். லோக்சபா தேர்தலுக்கு பின் இருவரும் தென் மாநிலத்துக்கு வருவது இதுவே முதல்முறை. லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், நாளை (7ம் தேதி) கேரள மாநிலம் கொச்சி வரும் மோடி, சனிக்கிழமை குருவாயூர் செல்கிறார். அங்குள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தும் அவர், குருவாயூரில் கட்டப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை திறந்து வைக்கிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்., தலைவர் ராகுலும், நாளை கேரளா வருகிறார். மலப்புரம் மாவட்டங்களில் சாலையில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இரண்டு நாட்களில் 6 சாலை பேரணி நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியும், காங்., தலைவர் ராகுலும் ஒரே நாளில் கேரளா வருவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Categories: Tamil
share TWEET SHARE