கனேடிய பிரதமர் ஜஸ்டின் எட்மன்டனுக்கு விஜயம்

July 11, 2019 56 0 0

எட்மன்டனுக்கு பிரதமர் விஜயம்… கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ எட்மன்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இன்று (வியாழக்கிழமை) மாலை எட்மன்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள பெடரல் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளுக்காகவே கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எட்மன்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. எட்மன்டனின் தென்கிழக்கிலுள்ள கிராண்ட் இம்பீரியல் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இயற்கை வளத்துறை அமைச்சர் அமர்ஜீத் சோஹி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ‘Team Trudeau 2019’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பிரசாரப் பணிகளின் ஒரு அங்கமாகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கனேடியப் பெடரல் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Canada
share TWEET SHARE