குண்டு தாக்குதல் நடந்த தேவாலயத்தில் இந்திய பிரதமர் மோடி அஞ்சலி

June 9, 2019 48 0 0

இலங்கையில் குண்டு தாக்குதல் நடந்த தேவாலயத்தில் இந்திய பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இலங்கை தலைநகர் கொழும்புவில், சமீபத்தில் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த புனித அந்தோணியார் தேவாலயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (9 ம் தேதி ) அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திரமோடி, அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்திலேயே நேரில் வந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார். பின்னர் மோடிக்கு சிவப்புகம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும், உயரதிகாரிகளும் உற்சாக முடன் மோடியை வரவேற்றனர். பின்னர், மோடி தலைநகர் கொழும்புவில், கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாள் அன்று, பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் சென்றனர். குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு அங்கு அஞ்சலி செலுத்தினார்.

Categories: sri lanka
share TWEET SHARE