குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை

June 11, 2019 9 0 0

தடை விதிப்பு… குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று காலையில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் கொட்டுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Categories: india news
share TWEET SHARE