சளி, இருமலால் அவதிப்படும் பெண்களே… இதோ உங்களுக்காக ஓமம், கற்பூரவல்லி சூப்!!!

July 14, 2019 7 0 0

சளி, இருமல் தொல்லையால் அவதிப்படும் பெண்கள் ஓமம், கற்பூரவல்லி சேர்த்து சூப் செய்து பருகலாம். சரி இதை எப்படி செய்வது? இதோ உங்களுக்காக. தேவையான பொருட்கள் : கற்பூரவல்லி இலை – 15, ஓமம் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – 4 எண்ணிக்கை, சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்), இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்), உப்பு – தேவைக்கு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்), வெற்றிலை – 4, கொத்தமல்லி – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன். செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும். சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் தயார்.

Categories: womens-tips
share TWEET SHARE