சஹோ படத்துடன் மோதும் ஜெயம் ரவியின் கோமாளி படம்!

July 11, 2019 109 0 0

பிரமாண்டமாக உருவாகி இருக்கும் சஹோ படத்துடன் தன் படத்தை மோத விடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். அதைவிட இவருடைய படங்கள் எப்போதும் வித்தியாசமான களமாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது கோமாளி என்ற படத்தில் இவர் நடித்துள்ளார், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளுக்கு மேல் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது, இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் தான் பிரமாண்ட படமாக சஹோவும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது,

Categories: Cinema
share TWEET SHARE