சிறியரக விமானம் நிலைதடுமறி ஆற்றுக்குள் விழுந்து விபத்து

July 14, 2019 19 0 0

சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது…ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள உமியா என்ற இடத்தில் சிறியரக விமானம் இன்று நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் அதில் சென்ற 9 பேரும் உயிரிழந்தனர். ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் வானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்து சாகசம் செய்வதற்காக உமியா நகர விமான நிலையத்தில் இருந்து சிலர் இன்று ஒரு சிறிய ரக விமானத்தில் சென்றனர். உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு சென்ற விமானம் சுமார் அரை மணி நேரத்தில் ஒரு தீவுப்பகுதியை நெருங்கியபோது, திடீரென்று உமியா ஆற்றங்கரையோரம் உள்ள சதுப்பு நிலத்தில் கீழே விழந்து நொறுங்கியது. ஸ்வீடன் நாட்டின் சில ஊடகங்கள் விமானம் ஆற்றுக்குள் பாய்ந்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Categories: world news
share TWEET SHARE