சூப்பரான ரவா பணியாரம் செய்து குழந்தைகளை அசத்துங்கள்

July 11, 2019 38 0 0

பள்ளிக்கூடம், டியூசன் முடித்து மாலையில் டயர்டாக வரும் குழந்தைகளுக்கு சூப்பராக ரவா பணியாரம் செய்து கொடுத்து அசத்துங்கள். மாலையில் குழந்தைகளுக்கு எளிய டிபன் செய்து கொடுப்பதற்கு ஒரு கப் ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து அதில் 1 கப் மைதா, ஒன்றரை கப் சர்க்கரையை திடமாக கட்டியில்லாத கலவையாக கலக்க வேண்டும். இதை ஸ்பூனில் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான ரவா பணியாரம் ரெடி. அப்புறம் என்ன குழந்தைகள் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடியை கலந்து மினி இட்லியை கடாயில் போட்டு தாளித்து எடுத்து கொடுத்தால் இட்லியை வெறுக்கும் குழந்தைகளும் ஆர்வமாக உண்பார்கள். காலி பிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்து அவற்றை வினிக்கர் அல்லது உப்பு திரவத்தில் 10 நிமிடம் வைத்து பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தலாம். கொத்தமல்லி தழை கெடாமல் இருக்க வேர்பகுதியை நீக்கிவிட்டு சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கட் ெசய்து எடுத்து அதை டிஸ்யூ பேப்பர் அல்லது காற்று புகும் காட்டன் துணியிலோ சுற்றி பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கலாம்.

Categories: womens-tips
share TWEET SHARE