ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை… அமைச்சர் தகவல்

June 6, 2019 77 0 0

இல்லை… வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாவது: மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால், ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்காக, அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்போர் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழகம் அனுமதி வழங்காது. தண்ணீர் பிரச்னையை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Categories: Tamil
share TWEET SHARE