ஜூலை மாதத்தில் விமான டிக்கெட் கட்டணம் உயர்கிறது

June 9, 2019 44 0 0

உயர்வு… விமான டிக்கெட் கட்டணம் உயர்வு… ஜூலை 1-ம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: விமான பயண பாதுகாப்பு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு பயணிகளுக்கு தற்போதைய பாதுகாப்பு கட்டணம் ரூ.130 இருந்தது. இனி ரூ.150 ஆக உயர்த்தப்படும் வெளிநாட்டு பயணிகளுக்கு 3.25 டாலரில் இருந்து 4.85 டாலராக அதிகரிக்கிறது. இந்த கட்டண உயர்வால் விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரும் இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE