நடுக்கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்கள் மீட்பு

June 9, 2019 46 0 0

நடுக்கடலில் சிக்கி தவித்த கன்னியாகுமரி மீனவர்கள் மீட்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன் நடுக்கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்களை மீட்புபடையினர் மீட்டு கொச்சின் துறைமுகத்தில் சேர்த்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் கொச்சின் கடற் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் சென்றபோது படகு பழுதானது. மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி தத்தளித்தனர். தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் மீட்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. காரணம், மீட்பு படையினரின் படகும் கடலில் பழுதானது. காப்பாற்ற வந்தவர்களும் நடக்கடலில் தத்தளித்து வந்ததால் இவர்களை மீட்கும் முயற்சி இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 9) எமரால்டு சரக்கு கப்பல் ஊழியர்கள் மீனவர்கள் 6 பேரையும் மீட்டு கொச்சின் துறைமுகம் கொண்டு சேர்த்தனர்.

Categories: world news
share TWEET SHARE