“நம்பிக்கை இல்லை… அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை”

June 10, 2019 92 0 0

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாமல் போயுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். அரசாங்கம் மீது மாத்திரமல்ல. எதிர்க்கட்சி மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். சிலர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறுகின்றனர். நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு பழைய முறையில் அரசியல் செய்து முன்னேற முடியாது. எனவே எனக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் புதிதாக சிந்திக்கும் பொறுப்பு உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள், மக்கள், நம்பிக்கை, இழந்துள்ளனர், பிரதமர் ரணில்.

Categories: sri lanka
share TWEET SHARE