நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 10, 2019 92 0 0

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் நேற்று 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை. இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Categories: world news
share TWEET SHARE