நியூசிலாந்து பந்தை வீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து

July 14, 2019 26 0 0

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 241 ரன்கள் சேர்த்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. போட்டியில் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ள நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்த்து விளையாட முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறினர். ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜோ ரூட் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவிற்கு பந்து வீச்சை சமாளித்து விளையாடிய பேர்ஸ்டோவ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாற்றத்தை சந்தித்தது. கேப்டன் மோர்கன் 9 ரன்னில் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது. இதனால் நியூசிலாந்து ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories: world news
share TWEET SHARE