பிகில்… விஜய்யின் பெயர் இதுதானாம்… இதுதானாம்!!!

June 10, 2019 16 0 0

பிகில்… அட விசிலைதான் கிராமப்புறங்களில் பிகில் என்று சொல்வார்கள். இதுதான் விஜய் பெயர் என்று ஒரு தகவல் செமத்தியாக உலா வந்து கொண்டு இருக்கிறது. அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது வேறொரு பெயர் லீக்காகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு தளபதி விஜய் – அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் மைக்கேல் என்று கூறப்பட்டது. தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என்று வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Categories: Cinema
share TWEET SHARE