பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு… கர்நாடக மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவிப்பு

June 10, 2019 20 0 0

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார். இவருக்கு பல்வேறு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Categories: Cinema
share TWEET SHARE