11 நாட்களுக்குள் 3 தங்கப்பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

July 14, 2019 21 0 0

சாதனை படைத்துள்ளார்… இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 11 நாட்களுக்குள் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். செக்குடியரசு நாட்டில் உள்ள கிளாட்னோவில் கிளாட்னோ நினைவு தடகள போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ், பந்தய தூரத்தை 23.43 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் கடந்த 11 நாட்களுக்குள் 200 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் 3-வது தங்கத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். போலந்தில் நடைபெற்ற இரண்டு தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஒட்டப் பந்தையத்தில் முகமது அனாஸ் 45.21 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். போலந்தைச் சேர்ந்த ஒமெல்கோ ரபால் 46.19 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Categories: world news
share TWEET SHARE