2 வருடத்திற்கு பின் உண்மை வெளியானது பிரதமர் வீட்டு பூனை கார் மோதியதால் இறந்தது

July 12, 2019 27 0 0

பிரதமர் வீட்டு பூனை எப்படி இறந்தது என்று தற்போது தெரிய வந்துள்ளது. 2 வருடங்களுக்கு பின்னர் உண்மை தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து பிரதமர், ஜெசிந்தா ஆர்டன். இவர் ‘பேடல்ஸ்’ என்ற செல்ல பூனையை வளர்த்து வந்தார். இது கடந்த 2017ல் இறந்தது. பூனை எப்படி இறந்தது என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ”காரை பின்னால் எடுக்கும் போது, தவறுதலாக பூனை மீது ஏற்றிவிட்டேன். அது இறந்துவிட்டது. குற்றவுணர்வு தாங்க முடியாமல், இப்போது உண்மையை கூறுகிறேன்,” என, பிரதமர் வீட்டு அருகில் வசிப்பவர், தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories: world news
share TWEET SHARE