வறட்சியால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 321,425 பேர்… அறிக்கையில் தகவல்

April 8, 2019 34 0 0

வறட்சியால் இதுவரை 76,379 குடும்பங்களைச் சேர்ந்த 321,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியால் இதுவரை 76,379 குடும்பங்களைச் சேர்ந்த 321,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கேகாலையில் 93 குடும்பங்களை சேர்ந்த 493 பேரும், புத்தளத்தில் 7943 குடும்பங்களை சேர்ந்த 28293 பேரும், வவுனியாவில் 39 குடும்பங்களை சேர்ந்த 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் 10071 குடும்பங்களை சேர்ந்த 33488 பேரும், மன்னாரில் 950 குடும்பங்களை சேர்ந்த 240 பேரும் என வடக்கு மாகாணத்தில் 11060 குடும்பங்களை சேர்ந்த 33833 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் அதிக்கூடியளவு பாதிப்பு மேல் மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளது.குறிப்பாக 45642 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 18147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி, பாதிப்பு, 2 லட்சம் பேர், அறிக்கை.

Tags: 2 லட்சம் பேர், பாதிப்பு, வறட்சி Categories: headlines, sri lanka
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *