17 வருடம் தலைமறைவு… முன்னாள் அரசியல் தலைவர் கைது

May 19, 2019 29 0 0

ஸ்பெயினை சேர்ந்த முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வருடங்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெய்ன் வெளியுறவுத்துறை அமைச்சு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.

பாஸ்க் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஜோசு டெர்மேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு வடக்கு ஸ்பெய்னில் உள்ள ஜராகோசில் சிவில் காவலர் முகாம்களில் நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 11 கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுடன் ஜோசுவிற்கு தொடர்பிருப்பதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார். இந்தநிலையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெய்ன் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்பெயின், வெளியுறவுத்துறை, கைது, முன்னாள் அரசியல்வாதி.

Tags: கைது, வெளியுறவுத்துறை, ஸ்பெயின் Categories: world news
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *