உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க எளிய டிப்ஸ்

June 9, 2019 87 0 0

வாழ்க்கையில் அனைத்தும் எளிதாக கிடைக்காது என்று கூறுவதுப் போல அழகான ஆரோக்கியமான முடியும் எளிதாக கிடைக்காது. உங்களது முடியை பொடுகு, முடி உதிர்தல், முடி வெடிப்பு , தலை அரிப்பு முதலியவற்றிலிருந்து பாதுகாக்க சிறிது கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதால் கூந்தல் ஊட்டச்சத்து பெற்று ஆரோக்கியமாக திகழும்.ஆலிவ் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போனற எண்ணெய்களை பயண்படுத்தலாம். தலையில் எண்ணெயை நன்றாக மசாஜ் செய்து குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்து ஷாம்புவால் தலையை அலச வேண்டும். எண்ணெய் மேல்தோல் முழுவதயும் பாதுகாத்து முடித் தண்டிற்கு ஊட்டம் அளிக்கிறது. தேங்காய் எண்ணெயிலிருக்கும் ஃபட்டி அஸிட்ஸ்(Fatty acids) முடித் தண்டிற்கு ஊட்டத்தைத் தருகிறது. ஆமணக்கு எண்ணெயிலிருக்கும் அதிகப்படியான ப்ரொட்டின்கள் கூந்தலிருக்கும் சேதமடைந்த கெரட்டின் ஸ்பாட்ஸை (Keratin spots) கட்டுப்படுத்துகிறது. கோடையில் குளிர்ந்த தேங்காய் எண்ணெயும் குளிர்காலத்தில் பாதாம் எண்ணெயும் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். தூக்கமின்மை ஒரு மோசமான மனநிலையை தருவது மட்டுமில்லாமல் உங்கள் கூந்தலையும் பாதிக்கிறது. நீண்ட காலத்திற்கான தூக்கமின்மை உச்சந்தலையில் அதிக எண்ணெய் உற்பத்தியை தூண்டுவதோடு, கூந்தலை டல்லாக காட்டுகிறது. தினம் குறைந்தது 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை இரவில் தூங்குவதால் கூந்தல் ஆரோக்கியம் அடைகிறது.

Categories: womens-tips
share TWEET SHARE