கட்சி அமைப்பு தேர்தலை நடத்த பாஜ தயாராகிறது

June 9, 2019 39 0 0

தயாராகி வருகிறது… நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது. எனவே இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் சந்திக்கிறார். அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பா.ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Categories: india news
share TWEET SHARE