சில்சார்-திருவனந்தபுரம் விரைவு ரயிலில் தீவிபத்து

June 9, 2019 35 0 0

அசாம் மாநிலம் சில்சார் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயிலின் 3 பெட்டிகளில் தீப்பிடித்தது. அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து சில்சார்- திருவனந்தபுரம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இது இந்தியாவின் 2வது அதிவிரைவு ரயில். இந்த ரயிலில் இன்று (ஜூன் 9) பயணிகள் ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பயணிகள் நீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால் தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் பேன்ட்ரியிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Categories: india news
share TWEET SHARE