இயற்கை வழிமுறையில் உங்கள் சருமத்தை அழகாக்க சில டிப்ஸ்!

June 10, 2019 54 0 0

இயற்கையை மீறி சில செயற்கை தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை…இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும். அழகாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள். இதோ உங்களுக்காக! ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி. மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

Categories: womens-tips
share TWEET SHARE