கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

June 11, 2019 22 0 0

கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கிறது என்று கூறி, உபி.,யில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உபி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கன்னோஜியா என்பவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜகீசா அரோரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை கோர்ட் அவசரமாக விசாரிக்க ஏற்று கொண்டது. இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்டோகி தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது. ஒரு கருத்தை வெளியிட்டதற்காக நிருபர்களை கைது செய்வீர்களா? அவர் என்ன கொலையா செய்து விட்டார்? மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தது தவறானது. பத்திரிகையாளர் கன்னோஜை உடனடியாக விடுவிக்கவும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உபி., முதல்வர் அலுவலகம் அருகே ஒரு பெண், முதல்வர் யோகியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்தார். இது தொடர்பாக முதல்வருக்கும் தெரிவித்திருப்பதாக கூறினார். இந்த வீடியோவை தான் நிருபர், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: india news
share TWEET SHARE