காணாமல் போன இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரம்

June 11, 2019 57 0 0

காணாமல்போன இளைஞரைக் கண்டுபிடிக்க கனடா பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஒட்டாவாவில் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ள இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போயுள்ள இளைஞனின் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் குறித்து தகவலளிக்குமாறு கோரியுள்ளனர். அத்துடன், அவர் குறித்து தகவல் அறிந்தவர்களை 613-236-1222 ext. 2355 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories: Canada
share TWEET SHARE