நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம்

June 11, 2019 27 0 0

நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர், கதாசிரியர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என, பன்முகம் கொண்டிருந்தவர், ‘கிரேசி’ மோகன், 66. சென்னை, மந்தைவெளியில், குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு, நேற்று (ஜூன் 10) காலை, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் இறந்தார். கிரேசி மோகனின் உடல் நேற்று (ஜூன் 10) மாலை, அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாடக மற்றும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இன்று (ஜூன் 11) அவரது உடல், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், கமல் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

Categories: india news
share TWEET SHARE