மீண்டும் உடல் நிலை பாதிப்பு… மருத்துவமனையில் முலாயம் சேர்க்கப்பட்டார்

June 11, 2019 30 0 0

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உ.பி.,முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் (79) நேற்று இரவு குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம்சிங் கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் அவ்வப்போது மருத்துவமனை சென்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் அவசர பிரிவில் இருப்பதாகவும், முலாயமின் உடல் நிலை குறித்து எவ்வித தகவலும் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்படவில்லை. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை முதல்வர் யோகி ஆதித்யா, முலாயம் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

Categories: india news
share TWEET SHARE