லியானர்டோ டாவின்சியின் விலை உயர்ந்த ஓவியம்… சவுதி இளவரசர் ஏலத்தில் எடுத்தாரா?

June 11, 2019 25 0 0

விலை உயர்ந்த ஓவியம்… லியானர்டோ டாவின்சி வரைந்த உலகின் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஓவியத்தை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான ”சல்வடார் முண்டி” என்ற ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்த ஓவியத்தை சாதனை விலைக்கு பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியானது. சுமார் 450 மில்லியன் டாலர் தொகைக்கு, விலை போன அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. தற்போது இந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின், உல்லாச படகில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இந்த ஓவியத்தை, சல்மான் சார்பில், மற்றொரு இளவரசர் பதர் பின் அப்துல்லா ஏலத்தில் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை சவுதி அரசு உறுதி செய்யவில்லை.

Categories: headlines, world news
share TWEET SHARE