வாயு புயலால் கடல் பகுதிக்கே அதிக மழை கிடைக்குமாம்!

June 11, 2019 29 0 0

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் நிலப்பகுதியை விட கடல் பகுதிக்கே அதிக மழை தருமாம். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், அரபிக்கடலில், ‘வாயு’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல், நிலப் பகுதியை விட, கடல் பகுதிக்கே அதிக மழை தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, பருவக்காற்று வலுவாக வீசுகிறது. ஜூன், 9ல் கேரளாவில் பருவமழை துவங்கியுள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு அருகே, நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், அரபிக் கடலில் இன்று புயலாக மாறுகிறது. புயலுக்கு, இந்தியா வழங்கியுள்ள, ‘வாயு’ என்ற, பெயர் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு அரபிக்கடலில் வாயு புயல் உருவானது. இந்த புயல் கரையை கடக்கும் போது 130 கி.மீ. முதல் 140 கி.மீ.வரை காற்றின் வேகம் இருக்கும் இந்த புயல் நாளை மறுநாள் (ஜூன் 13) குஜராத் மாநிலம் போர்பந்தருக்கும், மகுவாக்கும் இடையே கரையை கடக்கும்.

Categories: headlines, india news
share TWEET SHARE