இயற்கை முறையில் அழகை மெருகூட்டும் சில வழிகள்…!

June 12, 2019 61 0 0

இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்களின் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம். மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்’ செய்யுங்கள். பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும். கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கும். ஆப்பிள் பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

Categories: womens-tips
share TWEET SHARE