இ-சிகரெட்டுகளுக்கு தடை விதியுங்கள்… மத்திய அரசுக்கு பரிந்துரை

June 12, 2019 34 0 0

தடை விதிக்க பரிந்துரை… இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்தது. தொடர்ந்து அந்த அமைப்பின் ஆய்வுப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இ-சிகரெட்டுகளை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதோடு அவற்றையும் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories: india news
share TWEET SHARE