ஒவ்வாமை பொருள்களின் தகவலை தெரிவிக்க தவறிய சிங்கப்பூர் நிறுவன சுவையூட்டும் பொடி மீளப்பெறுகிறது

June 12, 2019 27 0 0

ஒவ்வாமைப் பொருள்களின் தகவல்களைத் தெரிவிக்கத் தவறிய சிங்கப்பூரின் Daesang நிறுவனத்தின் சுவையூட்டும் பொடி மீளப் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்களின் தகவல்களைத் தெரிவிக்காததால் அந்த நிறுவனத்தின் சுவையூட்டும் பொடி மீட்டுக் கொள்ளப்படவுள்ள தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பு வெளியிட்டது. அரிசிப் பொடி அடங்கிய பொட்டலங்களில் முட்டை, பால், கோதுமை ஆகிய பொருள்களின் ஒவ்வாமை தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. Daesang நிறுவனத்தின் சுவையூட்டல் பொடி 24 கிராம் பொட்டலங்களில் விற்கப்படுகிறது. குறிப்பாக கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சுவையூட்டும் பொடி மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. முட்டை, பால், கோதுமை ஆகிய பொருள்களால் ஒவ்வாமைக்கு உள்ளாவோர் Daesang சுவையூட்டல் பொடியை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று உணவு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பொருள்களை வாங்கிய நுகர்வோரின் விபரங்களுக்கு அல்லது பொருள்களை மாற்றிக்கொள்ள விசேட கரும பீடங்களும் அந்தந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

Categories: Canada, headlines
share TWEET SHARE