காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 12, 2019 23 0 0

ஆர்ப்பாட்டம்… ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதற்கு முன், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை காட்டுமாறு கோரிக்கை விடுத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டுத்தரவில்லை என தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது காணாமற்போன உறவினர்கள் வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில் தமது பிள்ளைகளை வேண்டி பிரார்தனைகளில் ஈடுபட்டிருந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து பேரணியாக கந்தசுவாமி கோவில் வீதியூடாக 843வது நாளாக காணாமற்போன உறவினர்களால் சுழற்சி முறை உண்ணாவிரதத்தில் இடம்பெறும் கொட்டகையை வந்தடைந்தனர். இதன்போது அமெரிக்க ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன், ‘ஜனாதிபதியே நாங்கள் உங்களை வரவேற்கவில்லை நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பி செல்லுங்கள்’, ‘சிறிசேனவே நீங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதற்கு முன் எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காட்டுங்கள்’ போன்ற பததைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Categories: sri lanka
share TWEET SHARE