குறிப்பிட்ட நாட்டை தாக்கும் வகையில் பேச வேண்டாம்… சீனா வலியுறுத்தல்

June 12, 2019 24 0 0

குறிப்பிட்ட நாட்டை தாக்கும் வகையில் பேச வேண்டாம்… கிரிகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். குறிப்பிட்ட நாட்டை தாக்கும் வகையில் பேச வேண்டாம் என சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனா தலைமையிலான, எட்டு நாடுகள் அடங்கிய, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் 13 – 14ல் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மாநாட்டின் இடையே, சீன அதிபர், ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில், மாலத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து அங்கு பேசினார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது குறித்து, அவர் விமர்சித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிலும், இந்தப் பிரச்னை குறித்து மோடி பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஷாங்க் ஹான்ஹுய் கூறியதாவது: பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற, இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் விமர்சித்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

Categories: world news
share TWEET SHARE