சமூக வலைத்தளத்தில் பொய் சொல்லி நிதி திரட்டிய பெண் கைது

June 12, 2019 24 0 0

பொய் சொல்லி சமூக வலைத்தளத்தில் நிதி திரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார. கணவருடன் விவாகரத்து ஆனதால் குழந்தைகளை வளர்க்க பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொய் சொல்லி, சமூக வலைதளங்கள் மூலம் 35லட்சம் ரூபாய் திரட்டிய பெண்ணை, துபாய் போலீசார் கைது செய்தனர். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். மேலும் உடல்நிலை மற்றும் வேறு காரணங்களை கூறி சமூக வலைதளங்கள் மூலம் பண உதவி கேட்போர் மீது அங்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும், அதனால், தன் குழந்தைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்படுவதாகவும் சமூகவலைதளங்களான, ‘டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ ஆகியவற்றில் தொடர்ச்சியான பதிவுகளை போட்டு வந்தார். அதில் தன் பிள்ளைகளின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்களை வளர்க்க பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக, தெரிவித்தார். இதைக் கண்டு இரக்கப்பட்ட பலர், ‘ஆன்லைன்’ மூலம் பண உதவி அளித்துள்ளனர். 17 நாட்களில், 35 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண் திரட்டி உள்ளார். ‘குழந்தைகள் தன்னுடன் வசித்து வருவதாக, அந்த பெண் சொல்வது அத்தனையும் பொய்’ என, அவரது முன்னாள் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆன்லைனில் பொய் சொல்லி பிச்சை எடுத்து 35 லட்சம் ரூபாய் திரட்டியதாக, அந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணின் பெயர், வயது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Categories: world news
share TWEET SHARE