சொத்து விபரங்களை தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

June 12, 2019 20 0 0

தாக்கல் செய்ய வேண்டும்… பொதுமக்கள் தங்களது சொத்து விபரங்களை, வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க நிதித் துறை அதிகாரிகளுடன், பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். அதில், வரி வருவாயை அதிகரித்தால் மட்டுமே, வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என, அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, ”நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது சொத்து விபரங்களை, 30ம் தேதிக்குள் சமர்ப்பித்து, உரிய வரியை செலுத்த வேண்டும். ”பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான், பாகிஸ்தான் வளர்ச்சி அடையும்,” என, பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரத்தில், ”ஜூன், 30க்கு பின், தாமாக முன்வந்து சொத்து விபரம் அளிக்கும் சலுகை கிடைக்காது,” என்றும் எச்சரித்துள்ளார். கடந்த, 2018ல், இம்ரான் கான் பிரதமர் பொறுப்பேற்றதில் இருந்தே, நாடு சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

Categories: world news
share TWEET SHARE