ஜி7- மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு

June 12, 2019 20 0 0

அழைப்பு… பிரான்சில் நடக்க உள்ள ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரான், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், ஜி-7 நாடுகளின் 45-வது உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஜ் நகரில் வரும் ஆக .24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இ்வ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Categories: world news
share TWEET SHARE