முச்சக்கர வண்டி கட்டணம் ரூ.10 அதிகரிப்பு

June 12, 2019 40 0 0

முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. ஒக்டென் 92 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

Categories: sri lanka
share TWEET SHARE