ராணுவ தளபதியை கொன்று பிரானா மீன்களுக்கு உணவாக்கிய அதிபர்

June 12, 2019 52 0 0

அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த 5 பேரை சுட்டுக்கொன்ற பின்னர் தனது ராணுவ தளபதியை பிரானா எனும் மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.இதையடுத்து இருநாட்டு உறவில் இணக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து டிரம்ப்-கிம் இடையே முதல் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை வியட்நாம் தலைநகர் ஹானோயில் நடந்தது.இந்த பேச்சு வார்த்தையில் டிரம்ப்-கிம் ஜாங் உன் இடையே நேரடியாக வார்த்தை மோதல் வெடித்தது. பாதி பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். இதையடுத்து மீண்டும் இருநாடுகளிடையே மோதல் வெடித்துள்ளது. தாயகம் திரும்பியதும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வடகொரிய அதிபர் நடவடிக்கையை துவக்கினார். அதிபரின் வலதுகரமாகவும், கொள்கை முடிவுகளில் உறுதுணையாக இருப்பவருமாக கருதப்பட்ட வெளியுறவுத்துறை சிறப்பு துாதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் சில நாட்களுக்கு முன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் ராணுவ தளபதி ஒருவர், ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தார் கிம் ஜாங் உன். தளபதியின் கை, கால்களை வெட்டி தன் வீட்டில் உள்ள பிரமாண்ட மீன் தொட்டியில் துாக்கி போட்டுள்ளார். தொட்டியில் இருந்த நுாற்றுக்கணக்கான பிரானா மீன்கள் தளபதியின் உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன. இரும்பை போன்ற பற்களை கொண்ட இந்த பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Categories: headlines, world news
share TWEET SHARE