“விசாரணைகளுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”

June 12, 2019 44 0 0

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்… குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு அவர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முஸ்லிம் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம் பற்றி விளக்கமளித்துள்ளனர். இதன்போதே அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் மேற்கொண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, “முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்” என இதன்போது தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

Categories: sri lanka
share TWEET SHARE