ஒட்டாவாவின் சில பகுதிகளுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

July 11, 2019 31 0 0

கடும் வெப்ப எச்சரிக்கை… ஒட்டாவாவின் சில பகுதிகளுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் பொதுச் சுகாதாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டாவாவில் எதிர்வரும் சில தினங்களுக்கு 30 முதல் 32 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன், செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிக நீரைப் பருகுமாறும் ஒட்டாவா பொதுச் சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories: Canada
share TWEET SHARE